விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    யாவரும் ஆய் யாவையும் ஆய்*  எழில் வேதப் பொருள்களும் ஆய்* 
    மூவரும் ஆய் முதல் ஆய*  மூர்த்தி அமர்ந்து உறையும் இடம்*
    மாவரும்திண் படைமன்னை*  வென்றிகொள்வார் மன்னுநாங்கை* 
    தேவரும் சென்றுஇறைஞ்சுபொழில்*  திருத்தேவனார்தொகையே.         

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

யாவரும் ஆய் - சேதனப் பொருள்கள் எல்லவற்றையும் சரீரமாகக் கொண்டவனாய்
யாவையும் ஆய் - அசேதனப் பொருள்கள் எல்லாவற்றையும் சரீரமாகக் கொண்டவனாய்
எழில் வேதம் பொருள்களும் ஆய் - அழகிய வேதங்களின் அர்த்தமும் தானாய்
மூவரும் ஆய் - (பிரமன், விஷ்ணு, ருத்ரன் என்று) மூன்று வடிவுகள் கொண்டவனும் தானேயாய்
முதல் ஆய - முழுமுதற் கடவுளான

விளக்க உரை

யாவர் என்ற சொல் உயர்திணைவிகுதி யேற்றதாதலால் ஸகல சேதநப்பொருள்களையுஞ் சொல்லுகிறது. யாவை என்ற சொல் அஃறிணை விகுதியேற்றதாதலால் ஸகல அசேதநப் பொருள்களையுஞ் சொல்லுகிறது. ‘ஆய்’ என்ற இவற்றோடு எம்பெருமானுக்கு ஐக்கியஞ்சொன்னது – சரீரசரீரிபாவத்தா லென்க. மூவருமாய் - பிரமன் என்கிற வேஷம்பூண்டு படைத்தல் தொழிலைச் செய்தும், தானான தன்மையில் காத்தல் தொழிலைச்செய்தும், ருத்ரனான தன்மையில் ஸம்ஹாரத்தொழிலைச் செய்தும் போருகிறவன் என்க. மூர்த்தி - ஸ்வாமி.

English Translation

He stands as everything and everyone, and as the substance of Vedas. He is the first-cause Lord, he is the Three too. He resides permanently at Nangur surrounded by fields, worshipped by the gods, attended by Vedic seers who win over strong-armed horse-riding kings, in Tiruttevanar Togai.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்