விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வாள்நெடுங்கண் மலர்க்கூந்தல், மைதிலிக்கா*  இலங்கை மன்னன் முடிஒருபதும் தோள்இருபதும் போய்உதிரத்* 
    தாள்நெடுந்திண் சிலைவளைத்த, தயரதன்சேய்* என்தன் தனிச்சரண் வானவர்க்குஅரசு, கருதும்இடம் தடம்ஆர்*
    சேண்இடம்கொள் மலர்க்கமலம், சேல்கயல்கள்வாளை*  செந்நெலொடும் அடுத்துஅரிய உதிர்ந்த செழுமுத்தம்* 
    வாள்நெடுங்கண் கடைசியர்கள், வாரும்அணி நாங்கூர்*  அரிமேய விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என் தன் தனிசரன் - எனக்கு ஒப்பற்ற ரசஷகனும்
வானவாக்கு அரசு - நித்யஸூரிநாதனுமான பெருமான்
கருதும் இடம் - திருவுள்ளமுவந்து எழுந்தருளி யிருக்கும் திவ்யதேசம்:
தடம் ஆர் - பொய்கைகளில் நிறைந் திருப்பனவும்
சேண இடம் கொள் - ஆகாசமுள்ள விடமெங்கும் ஓங்கி வளர்ந்திருப்பனவுமான

விளக்க உரை

திருநாங்கூர் ஸமீபத்தில் கடலுள்ளதனால் அக்கடலோதமும் இங்கே வந்து கூடும் அவ்வோதங்களுடனே முத்துக்களும் வந்துசேரும் அவை மீன்களின் வயிற்றினுள்ளே புகும். அவை அறுவடையில் வெளிப்பட்டன வேன்சு ‘செந்லொடு மடுத்தரிய” என்ற விடத்து. செந்நெலொடு மடுத்து என்றும் செந்நெலொடும் அடுத்து என்றும் பிரிப்பர்.

English Translation

Then in the yore the Lord came as the son of Dasaratha. For the sake of the dark tressed Vel-eyed Sita, he wielded his terrible bow and felled the ten heads and twenty arms of the Lanka king. He is my protector, and over Lord of the gods. He resides permanently in Nangur, amid lakes with Sel, Kayal and Valai-fish and lotus blooms that reach for the sky, and fertile fields of paddy which scarce enter the sickle’s bend, spilling gems of gold which the sharp-eyed agrarian dames collect in beautiful heaps. Offer worship to him in Arimeya Vinnagaram, O Frail Heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்