விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சங்குமலி தண்டுமுதல், சக்கரம் முன்ஏந்தும்*  தாமரைக்கண் நெடியபிரான், தான்அமரும் கோயில்* 
    வங்கம்மலி கடல்உலகில், மலிவுஎய்தும் நாங்கூர்*  வைகுந்த விண்ணகர்மேல், வண்டுஅறையும் பொழில்சூழ்*
    மங்கையர்தம் தலைவன் மருவலர்தம் உடல்துணிய*  வாள்வீசும் பரகாலன், கலிகன்றி சொன்ன* 
    சங்கம்மலி தமிழ்மாலை, பத்துஇவை வல்லார்கள்*  தரணியொடு விசும்புஆளும், தன்மை பெறுவாரே. (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சங்கு மலி தண்டு சக்கரம் முதல் முன் வந்தும் - ஸ்ரீ பாஞ்சஜந்யமும் பொருந்திய கௌமோதகியும் ஸூதர்சநமும் முதலான திவ்யா யுதங்களை கண் முன்னே தரித்துக் கொண்டிருக்கிற
நெடிய தாமரை கண் பிரான் தான் - நீண்ட தாமரை போன்ற திருக்கண்களையுடைய ஸர்வேச்வரன்
அமரும் கோயில் - நித்யவாஸம் பண்ணுகிய ஸந் நிதியாய்
வங்கம் மலி கடல் உலகில் மலிவு எய்து நாங்கூர் - கப்பல்கள் நிறைந்த கடலால் சூழப்பட்ட நிலவுலகத்தில் பிரஸித்திபெற்ற திருநாங்கூரிலுள்ளதான்
வைகுந்த விண்ணகர்மேல் - வைகுந்த விண்ணகரத் திருபதி விஷயமாக

விளக்க உரை

English Translation

This garland of sweet Tamil songs by Mangai King Parakalan, terrible sword wielder Kalikanri sings of the ancient Lord of conch, discus and bow, with lotus eyes, who is the permanent resident of Nangur’s Vaikunta Vinnagaram. Those who master it will have the power to rule over Earth and Heaven.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்