விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பண் நேர் மொழி ஆய்ச்சியர் அஞ்ச வஞ்சப்*  பகு வாய்க் கழுதுக்கு இரங்காது*  அவள்தன் 
    உண்ணா முலை மற்று அவள் ஆவியோடும்*  உடனே சுவைத்தான் இடம்*
    ஓங்கு பைந் தாள் கண் ஆர் கரும்பின் கழை தின்று வைகி*  கழுநீரில் மூழ்கி செழு நீர்த் தடத்து* 
    மண் ஏந்து இள மேதிகள் வைகும் நாங்கூர்*  மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஓங்கு பைந் தாள் கண் ஆர் கரும்பின் கழை தின்று - உயர்ந்து பசுங்கால்களை யுடையனவாய் கணுக்கள் நிரம்பியவான கரும்புத் தடிகளைத் தின்று
ஐவகி - நகரமாட்டாமல் அங்கேயே தாமஸித்துக்கடந்து (அதன்பிறகு)
கழு நீரின் செழு நீர் தடத்து மூழ்கி - செங்கழுநீர்ப் பூக்களோடு கூடிய அழகிய நீர் நிரம்பிய தடாகத்திலே முழுகி
மண் ஏந்து - (கொம்புகளில்) மண்ணைத் தாங்கிக்கொண்டிருக்கிற
இள மேதிகள் - இளைய எருமைகள்

விளக்க உரை

‘பகுவாய்’ என்ற விசேஷணம் பேய்ச்சிகள் ராகூஷஸத் தன்மைக்கு உரியதாம் கழுது – பேய் (ஓங்கு பைந்தாள் இத்யாதி) வயல்களில் இளைய எருமைகள் கரும்புகளின் தலையாடியை மேய்ந்து, தன்னளவல்லாதபடி மிகவும் தின்கையாலே நகர்ந்து செல்லமாட்டாமல் அவ்விடந் தன்னிலே இடம் வலங்கொண்டு வடாயாறி, பிறகு மெல்ல நடந்து சென்று செங்கழுநீர்க்; குட்டையிலே முழுகி, சேற்றிலே கொம்புகளைக் குத்தி மண்ணுருண்டையைப் பெயர்த்திதெடுத்துத் தாங்கிக் கொண்டு கிளம்பி, பின்னை அடித்துஏறவிடவும் முடியாத அவ்விடத்திலேயே கிடக்கும்படியைக் கூறினவாறு. இப்பாசுரத்தைப் பிள்ளைவிழுப் பரையரும் ஆப்பானுங்கூடி அநுசந்தித்துப் பொருள் நோக்குங் கால்-மூன்றாமடியில் ஒருமுறை ‘வைகி’ என்று வந்திருக்கிறது; நான்காமடியிலும் ‘வைகு’ என்று வந்திருக்கிறது; ஆவ்ருத்திக்குப் பொருளென்? என்று ஸந்தேஹித்து பட்டரைப் பணிந்து கேட்க; “அவ்விடத்து எருமைகளின் ஸௌகுமார்யம் விளக்கப்பட்டதாகிறது; முரட்டெருமைகளா யிருந்தால் பதறிப்பதறி நடக்கும்; ஸூகுமாரமான எருமைகளாகையாலே வைகி வைகிக் கிடக்கிறபடி” என்றருளிச் செய்தாராம். வைகுதல் விளம்பித்தல்.

English Translation

Then in the yore, the Lord was a child nursed by the fierce ogress Putana with thick-set lips and poison-breasts. The sweet-tongued, soft spoken cowherd-dames were filled with fear when he sucked the deathly breasts unharmed, then also sucked the life out of her. He resides in Nangur where buffalo calves nip the shoots of sugarcane growing tall, enter the lotus pond, then come out smeared with the slush of water tanks. Offer worship in Manimadakkoyil, O Heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்