விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தாய் எனை என்று இரங்காள்*  தடந் தோளி தனக்கு அமைந்த* 
    மாயனை மாதவனை*  மதித்து என்னை அகன்ற இவள்*
    வேய் அன தோள் விசிறி*  பெடை அன்னம் என நடந்து* 
    போயின பூங் கொடியாள்*  புனல் ஆலி புகுவர்கொலோ!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தட தோளி இவள் - பெரிய தோள்களையுடைய என் மகள்
எனை - என் விஷயத்தில்
தாய் என்று இரங்காள் - பெற்றதாய் என்றும் இரக்கங்கொள்ளவில்லை;
தனக்கு அமைந்த - தனக்குத் தகுந்த
மாயனை - ஆச்சரியனான திருமாலை

விளக்க உரை

“ஒரு மகள் தன்னையுடையேன் உலகம் நிறைந்த புகழால், திருமகள்போல வளர்த்தேன் செங்கண்மால் தான் கொண்டுபோனான்” (300) என்றாற்போலே பெற்றதாய் வயிறொயிக்கூடுமென்பது என் மகளுக்குத் தெரியாமையில்லை: தெரிந்தும், ‘அப்படித்தான் வயிறொயிட்டுமே; நமக்கு என்ன கெடுதி’ என்று ஈரமற்ற நெஞ்சினளாய் அகன்று போய்விட்டாள்; நம்மைப் பெற்றுவளர்த்த தாய் நம்மைப் பரிந்து பரிதாபமுறாதபடி நாம் நடந்துகொள்ள வேணுமேயென்று சிறிதும் இரக்கங் கொண்டாளில்லை. தன்னைவந்து அழைத்தவன் ஆச்சரியமான குணங்களோடும் சக்தியோடும் கூடினவன் என்றும், பெரிய பிராட்டியாரித்தில் பழகி ராஸிக்யத்தில் கைதேர்ந்தவனென்றும் அவனுடைய பெருமையை மதித்து உடன்சென்றாளே யொழிய, நான் வருந்துவேனென்பதைச் சிறிதும் நினைத்திலள். அவள் புறப்பட்டு நடந்து சென்ற போதையழகை நினைக்க நினைக்க என் வயிற்றெரிச்சல் ஆறவில்லை; மிகவும் உல்லாஸமாக நடப்பவள்போலத் தோள்களை வீசிக்கொண்டு, ‘அன்னப்பேடைதான் நடந்து செல்லுகின்றதோ’ என்னலாம்படியாகச் சென்ற அழகை என் சொல்லுவேன். என்னை வருத்தத்திற்கு ஆளாக்கிவிட்டுப் போனாலும் போகட்டும்; சேரவேண்டுமிடத்தில் சுகமாகச் சென்று சேர்ந்தாளாகிலும் ஸந்தோஷமே; தனக்கமைந்த மாயவனை மாதவனைப் பின் செல்லுகின்றாளாகையாலே பரஸ்பரம் மயங்கி வழி தப்புவர்களோ வென்று கவலைப் படுகின்றேன் றாளாயிற்று. ‘என்னை’ என்பது ‘எனை’ என்று தொக்கிக் கிடக்கிறது.

English Translation

My long-armed daughter never taught of me as her mother. Placing her trust on her new-found stranger-friend, my slender waisted girl left me, swinging her Bamboo-like arms, walking the swan-behind-its-mate walk. Would they have entered the water-fed Tiruvali? O, Alas!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்