விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    குயில் ஆலும் வளர் பொழில் சூழ்*  தண் குடந்தைக் குடம் ஆடி* 
    துயிலாத கண்_இணையேன்*  நின் நினைந்து துயர்வேனோ!*
    முயல் ஆலும் இள மதிக்கே*  வளை இழந்தேற்கு*
    இது நடுவே வயல் ஆலி மணவாளா!*  கொள்வாயோ மணி நிறமே!  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

குடம் ஆடீ - குடக் கூத்தாடின பெருமானே!
துயிலாத கண் இணையேன் - உறக்கங் கொள்ளாத கண்களே யுடைய அடியேன்
நின் நினைந்து - உன்னையே சிந்தித்துக் கொண்டு
துயர்வேனோ - துக்கித்துக் கிடப்பேனோ!

விளக்க உரை

திருவாய்ப்பாடியில் இடைப் பெண்களெல்லாரும் காணலாம்படி குடக்கூடித்தான அழகையும் அப்படிப்பட்ட ஸௌசீல்யத்தையும் திருக்குடந்தையிலே பிரகாசப்படுத்திக்கொண்டு கிடந்தருளும் பிரானே! என்னுடைய கண்களுக்கு உறக்கமென்பது அடியோட போயிற்று. இளையபெருமாள் (லக்ஷ்ணன்) அவதரித்த முஹூர்த்தத்திலே என்னுடைய கண்களும் பிறந்தன போலும், உறங்காதே கிடக்கிற இக்கண்களுக்குத் தான் நீ இலக்காகவில்லையே, அப்படியே உட்கண்ணான நெஞ்சுக்கும் இலக்காகாமலிருந்து விட்டாயாகில் ஒருவருத்தமுமின்றி வாழ்வேனே; எப்போதும் என்னினைவுக்கு விஷயமாகி வருத்துகின்றாயே! ஆகாசத்தில் சந்திரன் உதித்தவாறே நான் மேனி மெலிந்து வளையிழக்கின்றேன்; எனக்கு இந்த அநர்த்தம் போராதா? நீயும் நடுவே வந்து புகுந்து என்மேனி நிறத்தையும் கொள்ளைகொள்ள வேணுமோ வென்கிறாள்.

English Translation

O, Pot-dancer Lord of Kudandai surrounded by fertile groves here cuckoos haunt! My eyes do not go to sleep, always thinking you. The tender rays of the Moon, --made inauspicious by the rabbit, --have stolen my bangles. In the midst of this, would you steal my rouge as well? O Bridegroom of fertile Tiruvali!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்