விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பல்லாண்டு என்று பவித்திரனைப்*  பர மேட்டியைச்*  சார்ங்கம் என்னும்
    வில் ஆண்டான் தன்னை*  வில்லிபுத்தூர் விட்டு சித்தன் விரும்பிய சொல்*
    நல் ஆண்டு என்று நவின்று உரைப்பார்*  நமோ நாராயணாய என்று*
    பல்லாண்டும் பரமாத்மனைச்*  சூழ்ந்திருந்து ஏத்துவர் பல்லாண்டே  (2)  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பவித்திரனை - பரிசுத்தனும்;
பர மேட்டியை - பரமபத நிலயனும்;
சார்ங்கம் என்னும் வில் ஆண்டான் தன்னை - ஸ்ரீசார்ங்கமென்கிற தநுஸ்ஸை அடக்கி ஆள்பவனுமான எம்பெருமானை;
வில்லிபுத்தூர் விட்டு சித்தன் - ஸ்ரீவில்லிபுத்தூரிற் பிறந்த பெரியாழ்வார்;
விரும்பிய சொல் - ஆதரத்தோடு சொன்ன சொல்லாகிய இப்பிரபந்தத்தை;

விளக்க உரை

பரி சுத்தணும், பரமபதத்திலே வாசம் செய்பவனும், பஞ்ச ஆயுதங்களைத் தரித்துக் கொண்டிருக்கும் எம்பெருமானை திருவில்லிபுத்தூரிலே பிறந்த ஸ்ரீ பெரியாழ்வார் பொங்கும் பரிவாலே பாடின இந்த பிரபந்தத்தை, இம்மையிலே பாடுகிறவர்கள், மறுமையிலே ஸ்ரீமந் நாராயணனை சுற்றும் சூழ்ந்து கொண்டு நமோ நாராயணா என்று எப்போதும் மங்களாசாசனம் பண்ணும் பாக்கியம் பெறுவார்கள் என்று இப்பிரபந்தத்தை அனுசந்திப்பவர்களுடைய பலனையும் கூறி முடிவு பெறுகிறது இந்த ப்ரபந்தம்.

English Translation

These words were uttered with love by Villiputtur’s Vishnuchitta, wishing ‘Pallandu’ for the pure Lord, the large-hearted one, wielder of the Sarnga bow. Those who enjoy singing this surround the Lord at all times chanting ‘Namo Narayanaya’, for them too, this god year Pallandu.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்