விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மலை புரை தோள் மன்னவரும்*  மாரதரும் மற்றும்* 
    பலர் குலைய*  நூற்றுவரும் பட்டழிய*  பார்த்தன்
    சிலை வளையத்*  திண்தேர்மேல் முன்நின்ற*  செங்கண் 
    அலவலை வந்து அப்பூச்சி காட்டுகின்றான்* 
          அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மலைபுரை - மலையை ஒத்த;
தோள் - தோள்களையுடைய;
மன்னவர் - அரசர்களான;
மாரதரும் - மஹாரதரும்;
மற்றும் பலர்  உம் - மற்றும் பலவகை அரசர்களும்;

விளக்க உரை

பருத்த வடிவத்திலும் ஒருவராலும் சலிப்பிக்க முடியாதபடி உறுதியாயிருத்தலிலும் தோளுக்கு மலை உவமை யென்க. தேர்வீரர் - அதிரதர் மஹாரதர் ஸமரதர் அர்த்தாதர் என நால்வகைப்படுவராதலால் ‘மாரதரும் மற்றும்’ என்றார். (அஸஹாயராய்த் தாம் ஒரு தேரின்மேலிருந்து தமது ரதகஜதுரகபதாதிகளுக் கழிவுவாராமல் காத்துக்கொண்டு பல்லாயிரம் தேர் வீரர்களோடு பொருது வெல்லும் வல்லமையுள்ளார் - அதிரதம் என்றும கீழ்ச் சொன்னபடியே தாமிருந்து பதினோராயிரம் தேர்வீரரோடு பொருபவர் - மஹாரதர் என்றும் ஒரு தேர்வீரரோடு தாமுமொருவராய் நின்று எதிர்க்க வல்லவர் - ஸமரதர் என்றும் அங்ஙனமே பொருது தம் தேர் முதலியவற்றை இழந்துவிடுபவர் - அர்த்தரதர் என்றுஞ் சொல்லப்படுபவர். ) ‘மன்னவரும்’ என்ற விடத்திலுள்ள உம்மை ‘பலர்’ என்பதோடு கூட்டப்பட்டது. மாரதர் - ??? என்ற வடசொல் திரிபு. பார்த்தன் - வடசொல்; ‘???’ (குந்தி) என்பவளுடைய மகன். அலவலை - அர்த்தத்தின் உயர்த்தியையும் கேட்பவனுடைய தாழ்வையும் பாராமல் ரஹஸ்யார்த்தங்களைச் சொல்லுமவன்; வரம்பு கடந்து பேசுபவன். இப்படியெல்லாம் ஸ்ரீக்ருஷ்ணன் செய்தது - த்ரௌபதியின் விரித்த கூந்தலை முடிக்கும் பொருட்டாம்.

English Translation

The lotus-eyed Lord drove the chariot for Arjuna who wielded the bow and killed Duryodhana and his hundred brothers; kings with mountain-like arms, the great seer Bhishma, and a host of others tremble

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்