விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பட்டு அரவு ஏர் அகல் அல்குல் பவளச் செவ் வாய்*  பணை நெடுந் தோள் பிணை நெடுங்கண் பால்ஆம் இன்சொல்* 
    மட்டு அவிழும் குழலிக்கா வானோர் காவின்*  மரம் கொணர்ந்தான் அடி அணைவீர்*
    அணில்கள் தாவ நெட்டு இலைய கருங் கமுகின் செங்காய்வீழ*  நீள் பலவின் தாழ் சினையில் நெருங்கு*
    பீனத்தெட்டபழம் சிதைந்து மதுச் சொரியும்*  காழிச்சீராம விண்ணகரே சேர்மின் நீரே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அடி அணைவீர் - திருவடிகளைச் சேர விரும்புமன்பர்காள்
அணில்கள் தாவ - அணிற்பிள்ளைகள் கிளை கிளையாகத் தாவித்தவழ்வதனால்
நெடு இலைய கரு கமுகின் செங்காய் வீழ - நீண்ட இலைகளையுடைய கறுத்த பாக்கு மரங்களின் பழுக்காய்கள் உதிர்ந்து விழ (அதனாலே)
நீள் பலவின் தாழ் சினையில் நெருங்கு - நீண்ட பலாமரங்களினுடைய (காய்களின் கணத்தால்) தாழ்ந்த கிளைகளில் நெருங்கியிருக்கிற
பீனம் தெட்ட பழம் சிதைந்து மது சொரியும் - பருத்த கனியப்பழுத்த (பலாப்) பழங்கள் நசுங்கி தேனைப்  பொழியுமிடமான

விளக்க உரை

ப்ரவாளம் என்னும் வடசொல் பவளமெனத் திரிந்தது. பவண - மூங்கில், பசுமையிலும் நெய்ப்புடைமையிலும் திரண்ட வடிவத்திலும் மூங்கிலைத் தோளுக்கு உவமை கூறுவர். பிணை - மான்பேடை (அணில்கள் தாவ இத்யாதி) - இத்தலத்துச் சோலைகளின் நிலைமையை வருணிக்கிறார். அணிற்பிள்ளைகள் மரங்களிலே தாவித்திரிவது வழக்கமாகையாலே பாக்குமரங்களின் பணைகளிலே தாவும் போது அந்த உராய்தலினால் பழுக்காய்கள் உதிர்ந்து அவை பலாப்பழங்களின் மேல் “தொப்“ என்று விழ அதனால் அப்பழங்கள் பிளவுற்று உள்ளிருந்து தேன் வெள்ளமிட்டுப் பெருகுகின்றதாம். நெடுமை + இலை நெட்டிலை, “க்ரமுகம்” என்னும் வடசொல் கமுகு எனத் திரிந்தது, பீநம் - வட சொல், தெட்ட பழம் = எம்பெருமானார் இத்திவ்யப்ரபந்த காலக்ஷேபம் நடத்தியருளும் போது இவ்விடத்திலுள்ள “ தெட்ட “ என்பதற்குச் சரியான பொருள் விளங்கவில்லையென்று அருளிச் செய்து வைத்து, பின் பொருகால் திவ்யதேச யாத்திரை யெழுந்தருளும் போது இத்தலத்தின் சோலை வழியே வந்து கொண்டிருக்க, அங்கே காவல் மரங்களின் மீது சில சிறு பிள்ளைகள் ஏறிப் பழம்பறியா நிற்கையில் கீழேயிருந்த சில பிள்ளைகள் , அண்ணே! தெட்டபழமாகப் பார்த்துப் பறித்துப் போடு என்ன அதை யாத்ருச்சிகமாகக்; கேட்டருளின எம்பெருமானார்“ பிள்ளாய்! தெட்ட பழமென்றால் என்ன? அதை யாத்ருச்சிகமாகக் கேட் பழுத்த பழம் “ என்று இப்பிள்ளைகள் சொல்ல, உடையவரும் திருவுள்ளமுவந்து “ இது ஒரு திசைச் சொல் போலே யிருந்தது “ என்றாரென்று பெரியோர்க ளருளிச் செய்யக்கேட்டிருக்கை.

English Translation

Satyabhama with broad hips like a snake hood, Bamboo-like long thin arms, fawn-like eyes with Speech like the sweet milk and nectared coiffure, made the Lord bring for her Indra’s rare tree. Squirrels jump on tall palm trees spilling red fruit. Tall Jackfruit trees hang with heavy fruit branches. Crushed among them ripe jack fruit squeeze out nectar: Seerama Vinnagar, O People, go to!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்