விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கரு முகில் போல்வது ஓர் மேனி*  கையன ஆழியும் சங்கும்* 
    பெரு விறல் வானவர் சூழ*  ஏழ் உலகும் தொழுது ஏத்த*
    ஒரு மகள் ஆயர் மடந்தை*  ஒருத்தி நிலமகள்*
    மற்றைத் திருமகளோடும் வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஏழ் உலகும் தொழுது ஏத்த - உலகத்திலுள்ளா ரெல்லாரும் வணங்கித் துதிக்கவும் பெற்று,
ஒருமகள் ஆயர்மடந்தை - விலக்ஷணையான நீளாதேவியோடும்
ஒருத்தி நிலமகள் - ஒப்பற்ற பூமிப்பிராட்டியோடும்
மற்றை திருமகளோடும் - இன்னும் ஸ்ரீதேவியோடுங்கூடி
வருவான் - வருமவன்

விளக்க உரை

கீழ் எட்டுப்பாசுரங்களிலும் விபவாவதாரப்படிகளை அநுஸந்தித்துப் பேசினார் இவ்வளவிலே சித்திரகூடத் தெம்பெருமான் ஆழ்வார்பக்கலிலே திருவுள்ளமுவந்து, ஆழ்வீர்!, நீர் ஒவ்வொரு பாசுரத்திலும் வருவான் வருவான் வருவான் என்று பேசிக் கொண்டு வருகிறீராகையாலே நம்முடைய புறப்பாடு காண்கையில் உமக்கு ஆவல் அதிகரித்திருப்பதாக அறிகின்றேன், உமக்காக நான் இன்று ஒரு புறப்பாடு காட்டுகிறேன், கண்டுகளித்துக் கவிபாடும், என்று சொல்லி நாச்சிமார்களுடனே பெரிய திருவோலக்கமாகப் புறப்பாடு கண்டருள. அதனை ஸேவித்து மகிழ்ந்து பேசுகிறதுபோலேயிருக்கிறது இப்பாசுரம். திருமேனி காளமேகம் போன்றுள்ளது, அதற்குப் பரபாகமாகத் திருக்கைகளிலே திருவாழி திருச்சங்குகள் ஜ்வலிக்கின்றன. இந்திரனுள்ளிட்ட தேவர் குழாமெல்லாம் வந்து சுற்றிலும் சூழ்ந்து வருகின்றது. மற்றுமுள்ளாரும் தொழுது துதிக்கின்றனர். ஸ்ரீதேவி பூதேவி நீளாதேவி என்ற நாய்ச்சிமார்மூவரும் விட்டுப் பிரியாதே கூடவே எழுந்தருளியிருக்கின்றனர். ஆகவிப்படிப்பட்ட விபவம் பொலியப் புறப்பட்டெழுந்தருளா நின்றான் சித்திரகூடத் தெம்பெருமானென்று கண்ணாரக்கண்டு வாயாரப் பேசினாராயிற்று.

English Translation

With the hue of a dark rain-cloud, he comes wielding the conch and discus, surrounded by celestials, and worshipped by the seven worlds. The lotus-dame Lakshmi, the Earth Dame, and the cowherd-dame are by his side, when he comes. He resides in Tillai Tiruchitrakudam.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்