விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வளைக் கை நெடுங்கண் மடவார்*  ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப* 
    தளைத்து அவிழ் தாமரைப் பொய்கைத்*  தண் தடம் புக்கு அண்டர் காண*
    முளைத்த எயிற்று அழல் நாகத்து*  உச்சியில் நின்று அது வாடத்* 
    திளைத்து அமர் செய்து வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

காண - பார்த்தவளவிலே
முளைத்த எயிறு அழல் நாகத்து உச்சியில் - முளைத்த பற்களையுடையதும் விஷாக்நியை உமிழ்வதுமான காளியநாகத்தினுச்சியிலே
நின்று - நின்று கொண்டு
அது வாட திளைத்து - அந்த நாகம் இளைக்கும்படி நர்த்தனஞ் செய்து
அமர் செய்து - உல்லாஸமாக வீதியார எழுந்தருளின பெருமான்
 

விளக்க உரை

தவளத் தமிழ் தாமரைப் பொய்கை தளைத்து அவிழ் - கட்டுண்டிருந்து (பிறகு) அவிழ்ந்த ” என்று பொருளாய் விகஸிந்தபடியைச் சொல்லிற்றுகிறது. தாமரைகள் புஷ்பிக்கக்கூடிய பொய்கை என்று கருத்து, இப்படிப்பட்ட பொய்கையையன்றோ காளியன் தன் விஷாக்கியினால் கொதிப்பித்துக் கொண்டு கிடந்தானென்கை, தடம் - வடசொல் கரை.

English Translation

The fair-bangled wide-eyed cowherd dames wailed in concern when the Lord entered the cool waters of the lotus-lake and, -watched by all, -danced over the hoods of the poison fanged serpent. The mischief maker resides in Tillai Tiruchitrakudam.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்