விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உறி ஆர்ந்த நறு வெண்ணெய் ஒளியால் சென்று*  அங்கு உண்டானைக் கண்டு ஆய்ச்சி உரலோடு ஆர்க்க* 
    தறி ஆர்ந்த கருங் களிறே போல நின்று*  தடங் கண்கள் பனி மல்கும் தன்மையானை*
    வெறி ஆர்ந்த மலர்மகள் நாமங்கையோடு வியன்கலை எண் தோளினாள் விளங்கு*
    செல்வச் செறி ஆர்ந்த மணி மாடம் திகழ்ந்து தோன்றும்*  திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஒளியால் சென்று - (தன்னுடைய புன்முறுவலின்) காந்தியாலே இருட்டான இடங்களிலே  நடந்து சென்று
அங்கு - அவ்விடங்களிலே
உறி ஆர்ந்த - உறிகளிலே நிரம்பிய
நறுவெண்ணெய் - மணம்மிக்க வெண்ணெயை
உண்டானை ஆய்ச்சி கண்டு - வாரியுண்ணும்போது யசோதையானவள் கண்டு

விளக்க உரை

முதலடியில். “ஒளியாச் சென்று” என்றும் “ஒளியால் சென்று” என்றும் பாடபேதமுண்டு. முந்தின பாடத்தில், ஒளியா----‘செய்யா’ என்னும் வாய்பாட்டிறந்தகால வினையெச்சம்: ஒளிந்துகொண்டு என்றபடி. “ஒளியா வெண்ணெயுண்டானென்று உரலோடாய்ச்சி யொண்கயிற்றால் , விளியாவார்க்க ஆப்புண்டு விம்மியழுதான்” என்று மேலே ஆறாம்பத்திலு மருளிச்செய்வர். “ஒளியால் “என்ற பிந்தின பாடத்தில், 1.நாளிளந் திங்களைக் கோள்விடுத்து, வேயகம் பால் வெண்ணெய் தொடுவுண்ட” என்கிற பாசுரத்தின்படியே பொருள் கொள்ள வேணும்: அதாவது உறிகளிலே சேமித்து வைத்த வெண்ணெயைக் களவுகாணப் போனபோது, தன் திருநிறத்தின் இருட்சியாலும் அவ்விடத்தின் இருட்சியாலும் ஒன்றுந் தெரியாமையாலே தடவாநிற்கச் செய்தே கையிலே வெண்ணெய்த் தாழிகள் அகப்பட்ட மகிழ்ச்சியினால் சிரிப்பு உண்டாகும்: பூர்ண சந்திரனுடைய கிரணம்போலே திருமுத்துக்களின் ஒளி புறப்படவே , அந்த ஒளியையே கைவிளக்காகக் கொண்டு அமுது செய்வனென்க. ஆகவே இப்பாட்டில் ஒளியால் என்றது. திருமுத்துக்களின் ஒளியினாலே என்றவாறு. இப்பாட்டின் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தை அச்சிடுவித்தவர்கள் அநந்விதமாக அச்சிடுவித்துள்ளார்: அதாவது --- “(ஒளியால் சென்றங்குண்டானை.) கனவாலேயன்றியே ‘நாளினந்திங்கள்’ இத்தியாதிப்படியே.” என்று அச்சிடுவிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கியம் எங்ஙனேயிருக்கவேணுமென்றால் ,”களவாலே:

English Translation

Reaching out to the fragrant butter on the rope shelf brightly, he ate it all; seeing this cowherd-lady Yasoda bound him to a mortar. He stood like an elephant chained to a pillar, weeping, the fragrant lotus-lady Lakshmi, the goddess of speech Saraswati and the deer-riding eight-armed Parvati reside in the mansions of exceeding abundance. I have seen Him in the beautiful temple of Tirukkovalur.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்