விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    திண் படைக் கோளரியின் உரு ஆய்*  திறலோன் அகலம் செருவில் முன நாள்* 
    புண் படப் போழ்ந்த பிரானது இடம்*  பொரு மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி* 
    வெண் குடை நீழல் செங்கோல் நடப்ப*  விடை வெல் கொடி வேல்படை முன் உயர்த்த* 
    பண்பு உடைப் பல்லவர்கோன் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம்அதுவே.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

முனநாள் - முன்னொரு காலத்திலே
திண் படை - கூர்மையான (நகங்களாகிற) ஆயதங்களையுடைய
கோள் அரியின் உரு ஆய் - வலிமிக்க நரஸிம்ஹ மூர்த்தியாய்த் தோன்றி
செருவில் - போர்க்களத்தில்
திறலோன் அகலம் - மஹாபலசாலியான இரணியனது மார்வை

விளக்க உரை

பல்லவராஜனுடைய பெருமேன்மையைப் பேசுகிற மூன்றாமடியின் பிற்பகுதியில்“விடவெல் கொடி” என்றும், “விடை வெல்கொடி” என்றும், “விறல் வெல்கொடி” என்றும்மூன்று வகையான பாடங்கள் உள்ளனவாக வியாக்கியானம் காண்கிறது. முந்தின பாடத்தில்விடம் என்றது விஷமுடைத்தான நாகத்தைச் சொன்னபடியாய் நாகக்கொடியோன் என்றதாகிறது. இரண்டாவது பாடமே பெரும்பான்மையாக வழங்குகின்றது: விடை என்று இளம் பாம்புக்கும் பெயருண்டென்று பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்கிறார். எருது என்னும் பொருளையேகொண்டாலும் குறையில்லை: பல்லவனுக்கு ஆதிகாலமாக விருஷபக்கொடி இருந்ததென்றும், பின்பு நாகலோகத்தளவுஞ் சென்று வென்றுவந்தது காரணமாக நாகக்கொடி உண்டாயிற்றென்றும் வரலாறு உள்ளதாகச் சொல்லக் கேள்வியுண்டு, திண்படை - நரஸிம்ஹமூர்த்திக்கு நகங்கள் தவிர வேறு ஆயதமொன்று மில்லாமையினால் அந்த நகங்களையே இங்குத் திண்படை யென்கிறார்.

English Translation

The strong man-lion form wielded weapons that destroyed the mighty chest of Hiranya in a fierce fight. He resides in Kanchi surrounded by thickly populated mansion. The white-parasoled scepter-holding serpent-ensign spear-wielding Pallava king comes to offer worship in the temple of Paramecchura Vinnagaram.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்