விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பிச்சச் சிறு பீலிச்*  சமண் குண்டர் முதலாயோர்* 
    விச்சைக்கு இறை என்னும்*  அவ் இறையைப் பணியாதே*
    கச்சிக் கிடந்தவன் ஊர்*  கடல்மல்லைத் தலசயனம்* 
    நச்சித் தொழுவாரை*  நச்சு என் தன் நல் நெஞ்சே!  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பிச்சம் சிறு பீலி - (மயிலிறகுகளினால் செய்யப்பட்ட) குடையையும் சிறிய விசிறியையு முடைய
சமண் குண்டர் முதலாயோர் - நீசரான சமணர் முதலானவர்கள்
விச்சைக்கு இறை என்னும் - ஸர்வஜ்ஞனென்று சொல்லிக் கொண்டாடுகிற
அவ் இறையை - அந்த அமணச்சாமியை
பணியாதே - பணியாமல்.

விளக்க உரை

இவ்வுலகில் அவைதிகங்களான மதங்கள் பலவுண்டு; அவற்றில் போய்ச்சேருகிற ஜனங்கள் அதிகமேயன்றி, வைதிகஸம்ப்ரதாயத்திற் புகுமவர் குறைவாகவே யிருப்பர்; அப்படி அவைதிகமதங்களிற்சேர்ந்து தேவதாந்திரங்களைப் பணியாமல் திருக்கடன்மல்லைத் தலசயனத்துறைவாரைப் பணியுமவர்கள் எவரோ, அந்தப் பாகவதர்களையே தமது நெஞ்சு பணியக் கடவதென்கிறார். அவைதிகமதங்களில் ஒன்றான ஜைந மதத்தையெடுத்துப் பேசுகிறார்-பிச்சச்சிறுபீலி இத்யாதியால். சமண்குண்டர் என்றது-குண்டரான சமணர் என்றபடி; குண்டர்-நீசர்; சமணராவார்-அருகனை வழிபடுஞ்சமயத்தோராகிய ஆரகதரெனப்படும் ஜைநராவர்; இவர்கள் மிக்க தர்மிஷ்டர்களென்று தோற்றும்படியாக மயிற்பிச்சங்களைக் கட்டிக் கையிலேகொண்டு, எறும்பு முதலிய சிற்றுயிர்கட்குத் கொஞ்சமும் ஹிம்ஸை உண்டாகாதபடி அப்பீலிப்பிச்சங்களால் தரையை விளக்கிக்கொண்டு நடந்து செல்வதுபற்றிப் பிச்சச்சிறு பீலிச்சமண்குண்டர் என்றார்.

English Translation

The peacock-fan-waving Sramanas and others have a god for knowledge; instead of offering worship with them there, offer worship to the Lord of Vehka or to the Lord here in Kadal Mallai Talasayanam. O Heart, those who do so are our masters!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்