விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    படநாகத்து அணைக்கிடந்து அன்று அவுணர்கோனைப்*  படவெகுண்டு மருதுஇடைபோய் பழனவேலித்* 
    தடம்ஆர்ந்த கடல்மல்லைத் தலசயனத்துத்*  தாமரைக்கண் துயில்அமர்ந்த தலைவன் தன்னைக்* 
    கடம் ஆரும் கருங் களிறு வல்லான்*  வெல்போர்க் கலிகன்றி ஒலிசெய்த இன்பப்பாடல்* 
    திடம்ஆக இவைஐந்தும்ஐந்தும் வல்லார்*  தீவினையை முதல்அரிய வல்லார்தாமே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பழனம் வேலி - நீர் நிலங்களைச் சுற்றிலுமுடைத்தாய்
தடம் ஆர்ந்த - தடாகங்கள் நிறையப்பெற்றதான
கடல்மல்லை தலசயனத்து - திருக்கடல்மல்லையிலே
தாமரை கண்துயில் அமர்ந்த - தாமரைபோன்ற திருக்கண்கள் துயில்கொண்டிராநின்ற
தலைவர் தம்மை - ஸ்வாமியுமான தலசயனத்துறைவாரைப் பற்றி,

விளக்க உரை

“திடமாக” என்பதனை “ஐந்து மைந்தும் வல்லார்” என்பதிலும் அந்வயிக்கலாம்’ “தீவினையை முதலரிய வல்லார்” என்பதிலும் அந்வயிக்கலாம்; பிந்தின அந்வயத்தில்; நிச்சயமாகப் பாவத்தைப் போக்கிக்கொள்ளுவர்கள் என்றபடி.

English Translation

The Lord reclines on a hooded snake; he showed his wrath on the Asura king Hiranya. He went between the twin Marudu trees. He reclines in Talasayanam at kadal Mallai. The victorious battle-elephant-riding Kalikanri has sung his praise in ten sweet Tamil songs. Those who master it will be able to rid themselves of their Karmas on their own.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்