விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பார்ஆயது உண்டு உமிழ்ந்த பவளத் தூணை*  படு கடலில் அமுதத்தை பரி வாய் கீண்ட சீரானை*
    எம்மானை தொண்டர் தங்கள் சிந்தையுள்ளே*  முளைத்து எழுந்த தீம் கரும்பினை* 
    போர் ஆனைக் கொம்பு ஒசித்த போர் ஏற்றினை*  புணர் மருதம் இற நடந்த பொன் குன்றினை* 
    கார் ஆனை இடர் கடிந்த கற்பகத்தைக்*  கண்டது நான்-கடல்மல்லைத் தலசயனத்தே.  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பார் ஆயது - உலகமாக வுள்ளவற்றை யெல்லாம்
உண்டு - (பிரளயம் கொள்ளாதபடி) திருவயிற்றிலே வைத்து
உமிழ்ந்த - (பிரளயம் கழிந்தபிறகு) வெளிப்படுத்தினவனும்
பவளம் துணை - பவழத்தூண் போலே விரும்பத்தக்கவனும்
படு கடலில் அமுதத்தை - ஆழ்ந்த கடலிலுண்டான அமுதம்போலே போக்யனானவனும்

விளக்க உரை

இத்திருமொழியாலும் மேல்திருமொழியாலும் திருக்கடல்மல்லைத் திருப்பதியை மங்களா சாஸநம் செய்தருளுகிறார். அத்திருப்பதியி லெழுந்தருளியுள்ள எம்பெருமானுக்கு ‘ஸ்தலசாயீ’ என்று வடமொழித் திருநாமம். ஸ்ரீ புண்டரீக மஹர்ஷியின் கைகபினால் பூ விடுவித்துக் கொண்டு இன்னும் இப்படிப்பட்ட பக்தர்கள் கிடைக்கக்கூடுமோ வென்றெதிர் பார்த்துக்கொண்டு தரைக்கிடை கிடக்கிறபடி. அது தோன்ற இத்திருப்பதியின் திருநாமத்தைக் கடன்; மலலைத்; தலசயனம் என்று ஆழ்வார் அநுஸந்திக்கிறார். “பாரையுண்டு” என்னாது “பாராணதுண்டு” என்றது-அமுது செய்யாமல் மிச்சப்பட்ட வுலகம் எதுவுமில்லை என்றதைக் காட்டும். பாரென்று பேர் பெற்றவை எல்லாவற்றையும் உண்டு என்கை. பார் என்னுஞ் சொல் பூமிக்கு மாத்திரம்; வாசகமாயினும் இங்கு இலக்கணையால் உலகமென்று ஸாமாந்யப் பொருள் பெற்றிருக்கும்.

English Translation

The Lord swallowed the Earth and remade it. He is a coral sprig, and ambrosia of the ocean, the auspicious one who ripped the horse’s jaws. He is our lord, sprouting like sugarcane in the hearts of devotees. He is the battle-lion who plucked the battle-elephant’s tusk. He is a mountain of gold that Walked between the two Marudu trees, he is the Kalpaka Lord who saved the dark elephant in distress. I have seen him Talasayanam at kadal Mallai.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்