விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பொங்கு போதியும் பிண்டியும் உடைப்*  புத்தர் நோன்பியர் பள்ளியுள் உறை* 
    தங்கள் தேவரும் தாங்களுமே ஆக*  என் நெஞ்சம் என்பாய்* 
    எங்கும் வானவர் தானவர் நிறைந்து ஏத்தும்*  வேங்கடம் மேவி நின்று அருள்* 
    அம் கண் நாயகற்கு*  இன்று அடிமைத் தொழில் பூண்டாயே* 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என் நெஞ்சம் என்பாய் - ஓ மனமே!,
பொங்கு - கொம்புங்கிளையுமாகப் பணைத்து வளர்ந்திருக்கிற
போதியும் - அரசமரத்தையும்
பிண்டியும் - அசோகமரத்தையும்

விளக்க உரை

உலகத்திலே ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயம் ஓங்கினவிடம் மிகச் சுருங்கியும், ஜைநர் பௌத்தர் முதலிய புறமதத்தவர்களின் சமயம் வியாபித்தவிடம் மிகப் பரம்பியும் இராநின்றது. இப்படிப்பட்ட வுலகத்திலே விதிவசத்தாலே நாம் புறமதங்களிலே புகுந்தோ பிறந்தோ பாழாய்ப் போகாமல் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தாலே ஜனித்து எம்பெருமானுக்கு அடிமைப்பட்டு வாழப்பெற்றோமே என்கிற தமது மகிழ்ச்சியை ஆழ்வார் இது முதல் மூன்று பாசுரங்களில் வெளியிடுகிறார். பௌத்தர்களின் தேவதை அரச மரத்தடியை இருப்பிடமாகவுடைய தென்றும், ஜைநர்களின் தேவதை அசோகமரத்தடியை இருப்பிடமாக வுடைய தென்றும் ப்ரஸித்தி உண்டாதலால் பொங்குபோதியும் பிண்டியுமுடைப் புத்தர் நோன்பியர்என்றார். பொங்கு போதியுடையவர் புத்தர்; பிண்டியுடையவர் நோன்பியர் என்று முறை முறையே உணர்க. போதி என்று அரசமரத்திற்குப் பெயர்; அது கிளையும் கப்புமாக மிக வளர்ந்த மரமாதலால் பொங்குபோதி எனப்பட்டது. பிண்டி என்று அசோகமரத்திற்குப் பெயர். புத்தர்-புத்ததேவதையைப்பற்றினவர்கள். ஜைநர்கள் அதிகமாக விரதங்கள் கொண்டாடுகிறவர்களாதலால் நோன்பியர் எனப்பட்டனர். ஆக, பொங்கு போதியைப் பிரதானமாகக் கொண்ட புத்தர்களும், பிண்டிமரத்தைப் பிரதானமாகக் கொண்ட ஜைநர்களும் ஆகிய இப்புறமதத்தவர்களும் இவர்களால் தொழப்படும் தெய்வங்களும் நிறைந்துகிடக்குமிம்மண்ணுலகிலே, நெஞ்சமே! நீ அந்தத் தீயவழியில் புகாதே திருவேங்கட முடையானுக்கு அடிமைத்தொழில் பூண்டாயே!, நீயன்றோ பாக்யசாலி என்று உகந்தாராயிற்று.

English Translation

O Heart! In the temples of the Bauddhas and Sramanas who worship the Nyagrodha and Asoka trees, our Lord of beautiful eyes became their gods and became them. He resides in Venkatam where gods and Asuras crowd to offer worship. Today you too have entered into his service.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்